Latest News

கொடைக்கானலில் சாக்கடைக் கழிவால் நிலச்சரிவு.. டீக்கடை சரிந்து வீட்டின் மீது இறங்கியது


கொடைக்கானலில் பாதாளச் சாக்கடைக் கழிவினால் நிலச்சரிவு ஏற்பட்டு கடை சரிந்து விழுந்தது. மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் உள்ள அண்ணாநகர் பகுதியில் பாதாளச் சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. இந்த சுத்திகரிப்பு நிலையம் சரிவர செயல்படாத நிலையில் அந்தப் பகுதியில் உள்ள சுமார் 5000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சுகாதாரக் கேட்டினால் பாதிப்படைந்து வருகின்றனர்.

மேலும் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள இந்த சுத்திகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றக் கோரியும் பல்வேறு மனுக்களையும் நகராட்சி நிர்வாகத்திடமும், மாவட்ட ஆட்சியரிடமும் பல்வேறு மனுக்களை அளித்துள்ளனர். இந்த நிலையில் இந்த பாதாளச் சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்திற்கு வரும் கழிவுநீரானது சரிவர பராமரிக்கப்படாத குழாய்களினால் சாலையின் கீழே உடைப்புகள் ஏற்பட்டு கழிவு நீரானது ஆங்காங்கே சிதறி ஓடியதால் அருகே உள்ள கடையின் கீழே அரிப்புகள் ஏற்பட்டு நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அந்தப் பகுதியில் வைத்திருந்த ஒரு டீக்கடை சரிந்து கீழே உள்ள வீட்டின் மேல் உடைந்து விழுந்தது .இதில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.

இந்த சம்பவத்தினை பார்வையிட வந்த கொடைக்கானல் நகராட்சி தலைவர் ஸ்ரீதரை கல்லறை மேடு பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த பகுதியில் 110 உணவு விடுதிகளின் சார்பாக தனியாரால் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் சரிவர பராமரிக்கப்படாமல் ,உள்ளதாகவும் அதனால் பாதாள சாக்கடைக்குள் செல்ல வேண்டிய கழிவுநீர், கசிந்து நிலத்தடி மண் சரிந்து இந்த கடை இடிந்துள்ளதாகவும் குற்றம் சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சுத்திகரிப்பு நிலையம் சரிவர செயல்படாத காரணத்தினால் இதேபோல் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயமும், அந்தப் பகுதியில் உள்ள சுமார் 5000 குடும்பங்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயமும் உள்ளதால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய பிரச்சினை குறித்து நகர்மன்ற தலைவர் ஸ்ரீதரிடம் கேட்டதற்கு 144 கோடி செலவில் நகராட்சி சார்பாக புதிய கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் கட்ட ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளதாகவும், அதி விரைவில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.