Latest News

அண்ணன் கண் முன்பாக 2 தங்கைகள் பலாத்காரம்- சிறுமிகளை சூறையாடிய 15 மனித மிருகங்கள்!


பாட்னா: பீகார் மாநிலம் ரோடாஸ் மாவட்டத்தின் சசாராம் பகுதியில் உள்ள கோயிலுக்கு சென்று வீடு திரும்பிய 2 மாணவிகள் அவர்களின் சகோதரருக்கு முன்பாகவே 15 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 6 மற்றும் 7 ஆம் வகுப்பு பயின்று வரும் அந்த மாணவிகள், சசாராம் பகுதியில் உள்ள கோயிலுக்கு சென்றுள்ளனர். சாமி தரிசனம் செய்து முடித்த பிறகு வீடு திரும்பியுள்ளனர். அப்போது அவர்கள் வீட்டுக்கு திரும்பும் வழியில் வரும் போது 15 பேர் கொண்ட கும்பல் மாணவியை சுற்றி வளைத்தனர். மாணவிகள் அலறியும் பயனில்லை. அம்மாணவிகள் இருவரும் அந்த கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர்.

இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால் சொந்தக்காரர்களான அந்த மாணவிகளின் சகோதரர் ஒருவரின் முன்பே இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இரண்டு மாணவிகளும் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக ரோடாஸ் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து போலீசார் அந்த கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். இந்நிலையில் சம்பவத்தை நேரில் கண்ட அவர்களது சகோதரர் இந்த விஷயத்தில் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று புகார் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.