ஈரோடு திமுக, அதிமுக இடம் பெறாத 3வது அணி அமைந்தால் நல்லது, சிறந்தது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். ஈரோடு வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒரு கட்சி ஆட்சி முறை இருந்தால் ஜனநாயகத்தை பரவலாக்க முடியாது. எனவே, தான் கூட்டணி ஆட்சி தேவை என விடுதலைச்சிறுத்தைகள் கட்சி கருதுகிறது. இதை வலியுறுத்தும் வகையில் சென்னையில் ஆக.17-ம் தேதி கூட்டணி ஆட்சி மாநாடு நடத்துகிறோம்.
அகில இந்திய அளவில் பாஜக, காங்கிரஸை தவிர்த்தும், மாநிலத்தில் திமுக, அதிமுகவை தவிர்த்தும் பிற கட்சிகளை அழைக்க இருக்கிறோம். கூட்டணியில் இருந்து எங்களை கழற்றிவிட்டதாக திமுகவும், கூட்டணியில் இருந்து பிரிந்துவிட்டதாக நாங்களும் இதுவரை அறிவிக்கவில்லை. திமுகவுடன் சுமூக உறவு தொடர்கிறது. அதேநேரத்தில், திமுக, அதிமுக ஆட்சிக்கு வர முடியாத நிலைக்கு மூன்றாவது அணி அமைந்தால் சிறப்புக்குரியது. கூட்டணி ஆட்சி மாநாட்டுக்கும், மூன்றாவது அணிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. மக்களின் பிரச்னைகளுக்காக குரல் கொடுப்பதற்காக தனியாக கூட்டு இயக்கம் உருவாக்குவது தொடர்பாக மட்டும் தான் மார்க்சிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். மூன்றாவது அணி குறி்த்து இதுவரை பேசவில்லை என்றார் திருமாவளவன்
No comments:
Post a Comment