திருச்சி ஸ்ரீரங்கம் கோவில், அரியலூர் ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இருவரும் கடந்த சில வருடமாகவே மொட்டைக் கடிதம் அனுப்புவதை பொழுது போக்காக வைத்து செயல்பட்டு வந்துள்ளனர்.
சமீபத்தில் ஸ்ரீரங்கம் கோவில், அரியலூர் ரயில் நிலையம் ஆகிய இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் மொட்டைக் கடிதம் அனுப்பியிருந்தனர். இதையடுத்து கடிதம் அனுப்பிய நபரைப் பிடிக்க போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில், ஜோசப் ஸ்டீபன், லால்குடியை சார்ந்த முருகானந்தம்,ஆகிய இருவர் சிக்கினர். இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment