வெற்றி பெற்று முதல் பரிசிணை வென்ற VFC அணியும் இரண்டாம் இடம் பிடித்த WFC அணியினருக்கும் TIYA வின் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
அதிரை வெஸ்டர்ன் ஃபுட் பால் கிளப் [ WFC ] நடத்தும் 8 ஆம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி நமதூர் மேலத்தெரு மருதநாயகம் மைதானத்தில் இன்று இறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் அதிரை WFC அணியும், பட்டுக்கோட்டை VFC அணியும் மோதினர். ஆட்ட இறுதியில் 3-0 என்ற கணக்கில் கோல் அடித்து பட்டுக்கோட்டை அணி வெற்றி பெற்றது.
இதை தொடர்ந்து பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. முதல் பரிசை பட்டுக்கோட்டை அணியினரும், இரண்டாம் பரிசினை அதிரை அணியினரும் பெற்றனர். தொடர் போட்டியில் சிறந்த சாதனை படைத்தவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டன. இதில் சிறந்த கோல் கீப்பராக மஹ்ஸின், சிறந்த சென்டர் ஹைதர் அலி, சிறந்த ஃபார்வர்ட் கபாலி, சிறந்த ஸ்டாப் பிரதீப் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. சிறந்த இளம் வீரருக்கான பரிசு சைஃபுதீனுக்கு வழங்கப்பட்டது.
முன்னதாக நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட வி.எம் அப்துல் மஜீது, கே.எஸ்.எம் பகுருதீன், முன்னாள் கால்பந்தாட்ட வீரர் ஜபருல்லாஹ், வி.டி தகளா மரைக்காயர், ஏ. சிக்கந்தர் பாதுஷா ஆகியோர் கலந்துகொண்டு விளையாட்டு வீரர்களுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்து ஆட்டத்தை துவக்கி வைத்தனர்.
நிகழ்ச்சிகள் அனைத்தையும் சுலைமான், சேக்தாவூது ஆகியோர் தொகுத்து வழங்கினார். ஆட்ட அம்பயர்களாக வாசு தேவன் மற்றும் ஹாஜா நசுருதீன், லைன் அம்பயர்களாக சுலைமான், அப்ஸர் ஆகியோர் சிறப்பாக பணிபுரிந்தனர்.
இன்றைய இறுதி ஆட்டத்தை காண ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் மைதானத்திற்கு திரளாக வருகை தந்து ரசித்தனர்.
நன்றி : அதிரைநியூஸ்
கே. அப்துல் வஹாப் ( உஜாலா )
No comments:
Post a Comment