பட்டர் பன்... கிரீம் பன் சாப்பிட்டிருப்போம். ஆனால் பல்லி பன் சாப்பிட்டிருக்கிறீர்களா? ஏர்இந்தியா விமானத்தில்தான் பயணி ஒருவருக்கு பல்லி பன் கொடுத்துள்ளனர் விமான பணிப்பெண்கள். டெல்லியில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் கொடுக்கப்பட்ட உணவில்தான் பல்லி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏர் இந்தியாவிற்கு சொந்தமான ஏ.ஐ. 111 என்ற விமானம், டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் (ஐ.ஜி.ஐ) இருந்து வியாழக்கிழமையன்று மதியம் 1மணிக்கு லண்டன் புறப்பட்டது. அப்போது விமானத்தில் பயணித்தவர்களுக்கு ஏர் இந்தியா சார்பில் உணவு வழங்கப்பட்டது. அதில் ஒரு பயணிக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி இருந்தது. இதனால் அதிர்ச்சிடைந்த பயணி, இது குறித்து விமான பணிப்பெண்களிடம் புகார் கூறினார். இதையடுத்து விமானப்பணிப் பெண்கள் அவருக்கு மாற்று உணவை வரவழைத்து கொடுத்தனர். எனினும் அந்த பயணி அந்த உணவை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார்.
No comments:
Post a Comment