ஐபிஎல் மேட்ச் பிக்ஸிங் புகார் தொடர்பான விசாரணையை நடத்தி வரும் சுப்ரீம் கோர்ட் நியமித்த 3 பேர் கொண்ட கமிட்டி, இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் ஜக்மோகன் டால்மியாவின் உடல் நிலை குறித்து கவலை தெரிவித்துள்ளது. மேலும் டால்மியாவின் உடல் நிலை இப்படி இருக்கும் நிலையில் யார் முக்கிய முடிவுகளை எடுக்கிறார்கள் என்பதே தெரியவில்லை என்றும் அது சந்தேகம் கிளப்பியுள்ளது. கமிட்டி உறுப்பினர்கள் டால்மியாவைச் சந்தித்தபோது அவர் சரிவர பேசாமலும், குழறிக் குழறிப் பேசியதையும் வைத்து இந்த சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது சுப்ரீம் கோர்ட் கமிட்டி.
அவரது பேச்சு சரிவர இல்லை என்றும் வார்த்தைகள் தட்டுத் தடுமாறி வருவதாகுவும் கமிட்டி உறுப்பினர்கள் கூறுகிறார்கள். முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான கமிட்டி உறுப்பினர்கள் டால்மியாவை சந்தித்தனர். அப்போதுதான் அவர் உடல் நலக்குறைவுடன் இருப்பதை அவர்கள் நேரில் அறிந்தனர். டால்மியாவுக்குப் பதில் அவரது மகன்தான் கமிட்டி உறுப்பினர்களிடம் பேசினாராம். டால்மியாவால் பேசவே முடியவில்லையாம். இப்படிப்பட்டவர் எப்படி பிசிசிஐ தலைவராக செயல்படுகிறார் என்ற சந்தேகத்தை தற்போது இவர்கள் கிளப்பியுள்ளனர். கடந்த மார்ச் மாதம் நடந்த தேர்தலில் டால்மியா போட்டியின்றி தேர்வானார் என்பது நினைவிருக்கலாம். ஆனால் அவர் அதன் பின்னர் எங்குமே வந்து போனதாக தகவல் இல்லை. கிட்டத்தட்ட வீட்டோடு இருக்கிறார்.
No comments:
Post a Comment