Latest News

போலி கல்விச் சான்றிதழ் விவகாரம்: டெல்லி சட்ட அமைச்சர் ஜிதேந்திரசிங் தோமர் அதிரடி கைது!


போலி கல்விச் சான்றிதழ் சமர்பித்ததாக தொடரப்பட்ட வழக்கில் டெல்லி சட்ட அமைச்சர் ஜிதேந்திர சிங் தோமர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு அம்மாநில ஆளும் ஆம் ஆத்மி கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. டெல்லி மாநில சட்டத்துறை அமைச்சர் ஜிதேந்தர் சிங் தோமரின் கல்வி சான்றிதழ் போலியானது என்று அம்மாநில உயர் நீதிமன்றத்தில் சந்தோஷ்குமார் சர்மா என்பவர் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்த நீதிமன்றம் தோமர் சட்டம் பயின்றதாகக் கூறும் பீகாரின் திலக் மாஞ்சி பாகல்பூர் பல்கலைக் கழகமானது, அவரது சான்றிதழை உறுதிபடுத்தும்படி நோட்டீஸ் அனுப்பியிருந்தது. 

இதற்கு பதிலளித்த பாகல்பூர் பல்கலைகழகமோ, தோமர் கல்வி பயின்றதற்கான சான்றுகள் இல்லை; அவரது கல்வி சான்றிதழில் குறிப்பிடப்படுகிற எண் 3687, 1999ஆம் ஆண்டு படித்த சஞ்சய்குமார் சௌத்ரி என்ற மாணவருக்கானது எனவும் பதில் அனுப்பியுள்ளது. இதனால் தோமர் சமர்பித்த சட்டக் கல்வி சான்றிதழ் போலியானது என்பது உறுதியானது. இதனைத் தொடர்ந்து தோமர் பதவி விலக பாரதிய ஜனதா, காங்கிரஸ் கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இந்த நிலையில் அதிரடியாக ஜிதேந்திரசிங் தோமர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரான சஞ்சய் சிங் தமது ட்விட்டர் பக்கத்தி, அமைச்சர் ஜிதேந்திரசிங் தோமர் திடீரென கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய உள்துறை அமைச்சக கட்டுப்பாட்டில் டெல்லி போலீஸ் வருவதால் மோடி அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறது என்று சாடியுள்ளார். VIDEO : Delhi Law Minister Jitender Singh Tomar arrested in fake law degree case, AAP lashes out at Modi Gov

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.