சென்னையில் போலீஸார் சனிக்கிழமை இரவு நடத்திய அதிரடி சோதனையில் 778 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் சட்டம், ஒழுங்கைப் பராமரிக்கவும், ரௌடிகளை கட்டுப்படுத்தவும், தலைமறைவு குற்றவாளிகளை கைது செய்யவும், குற்றங்களை குறைக்கவும் பெருநகர காவல்துறையால் வாரந்தோறும் கூட்டு ரோந்து, தீவிர வாகனச் சோதனை, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்பு ஆகியவை நடத்தப்பட்டு வருகின்றன.
இதன்படி சனிக்கிழமை இரவு போலீஸார் சென்னையின் முக்கியமான சாலை சந்திப்புகளில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல தனியார் விடுதிகளில் திடீர் சோதனை நடத்தினர். கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம், மார்க்கெட், ரயில் நிலையம், கடற்கரை ஆகிய இடங்களில் போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸார் 778 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். மேலும் மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக போலீஸார் 38 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
No comments:
Post a Comment