திமுக தலைவர் கருணாநிதியின் மகள் மு.க.செல்வி மீதான மோசடி வழக்கை 6 மாதத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதியின் மகள் மு.க.செல்வி. இவர் மீது கடந்த 2012ம் ஆண்டு சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த நெடுமாறன் என்பவர் மோசடிப் புகார் ஒன்றை அளித்தார். அதில், செல்வியும், அவரது மருமகனும் சேர்ந்து நிலமோசடி செய்ததாக அவர் குற்றம் சாட்டியிருந்தார். இந்த வழக்கு பூந்தமல்லி நீதிமன்றத்தில் தொடர்ந்து நிலுவையில் உள்ளது. இந்நிலையில், இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் நெடுமாறன் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி, ‘செல்வி மீதான மோசடி வழக்கை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும்' என பூந்தமல்லி குற்றவியல் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.


No comments:
Post a Comment