அதிரை மேலத்தெரு சானாவயல் பகுதியை சேர்ந்தவர் முஹம்மது முஸ்தபா [ வயது 47 ] சென்னையில் சொந்தமாக தொழில் நடத்தி வருகிறார். கடந்த வாரம் இவரது மனைவியின் கண்புரை அறுவை சிகிச்சைக்காக வீட்டை பூட்டிவிட்டு பக்கத்து வீட்டில் வசித்து வரும் உறவினர் ஜமால் முஹம்மதிடம் வீட்டை பார்த்துக்கொள்ளும்படி கூறிவிட்டு சென்னை சென்றுள்ளார். வழக்கம் போல் நேற்று அதிகாலை ஜமால் முஹம்மது வீட்டை திறந்துள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டில் உள்ளே சென்று பார்த்தபோது பெட் ரூமில் இருந்த பீரோல் உடைத்து அதில் உள்ள பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடப்பதை கண்டு அறிந்து அதிர்ச்சியடைந்தவர். உடனே சென்னையில் இருக்கும் முஹம்மது முஸ்தபாக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவரமாக ஊர் திரும்பியவர் வீட்டில் திருடு போயிருப்பதை அறிந்து நேராக அதிரை காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். புகாரில் வீட்டின் பீரோலில் வைக்கப்பட்டிருந்த 45 சவரன் நகை, லாப்டப், 47 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போயிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து பட்டுக்கோட்டை டிஎஸ்பி பிச்சை தலைமையில், அதிரை காவல்துறை ஆய்வாளர் கண்ணையன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். திருட்டிற்காக திருடர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் வீட்டில் கைப்பற்றியுள்ளனர். திருடர்கள் விட்டுச்சென்ற தடயங்களும் சேகரிக்கப்பட்டன. தஞ்சையிலிருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ள இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் இந்த பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.










No comments:
Post a Comment