முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டு தண்டனை விதித்துத் தீர்ப்பளித்த கர்நாடக நீதிபதி மைக்கேல் டி குன்ஹா, கர்நாடக உயர்நீதிமன்ற ரிஜிஸ்திரார் ஜெனரலாக (பதிவாளர் ஜெனலராக) பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளார். பெங்களூரு தனி நீதிமன்றத்தில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்து வந்தவர் குன்ஹா. இந்த வழக்கில் நான்கு பேருக்கும் தலா 4 ஆண்டு சிறைத் தண்டனை, ஜெயலலிதாவுக்கு ரூ. 100 கோடி அபராதம் விதித்து அதிரடி தீர்ப்பளித்தார்.
இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து ஜெயலலிதா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரது முதல்வர் பதவி, எம்.எல்.ஏ. பதவி ஆகியவை பறி போயின. இந்த தீர்ப்புக்குப் பிறகு தனது வழக்கமான சட்டப் பணிக்குத் திரும்பிய குன்ஹா, கர்நாடக உயர்நீதிமன்ற விஜிலன்ஸ் பதிவாளராக இருந்து வந்தார். இ்ந்த நிலையில் அவருக்குப் பதவி உயர்வு கொடுத்து ரிஜிஸ்திரார் ஜெனரலாக இடமாற்றம் செய்துள்ளனர். இதுவரை ரிஜிஸ்திரார் ஜெனரலாக இருந்து வந்த பி.ஏ.பாட்டீல் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment