சென்னை ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அண்ணா திமுக வேட்பாளராகப் போட்டியிட்ட முதல்வர் ஜெயலலிதா 1.50 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார். இத்தேர்தலில் ஜெயலலிதா 1,60,432 வாக்குகளையும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் மகேந்திரன் 9,710வாக்குகளையும் பெற்றுள்ளார். ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்ட 27 பேரும் டெபாசிட்டை பறிகொடுத்துள்ளனர். சென்னை ஆர்.கே நகர் எம்.எல்.ஏ.வாக இருந்த அ.தி.மு.க.வின் வெற்றிவேல் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து கடந்த 27-ந் தேதியன்று அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் அதிமுக சார்பில் முதல்வர் ஜெயலலிதா, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சி.மகேந்திரன் மற்றும் சுயேட்சைகள் உட்பட 28 பேர் போட்டியிட்டனர். இத்தேர்தலில் மொத்தம் 74.4% வாக்குகள் பதிவாகி இருந்தன. மொத்தமுள்ள 2.43 லட்சம் வாக்குகளில் சுமார் 1.81 லட்சம் வாக்குகள் பதிவாகின. வாக்குப் பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட அனைத்து வாக்குச் சாவடிகளும் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையமான ராணிமேரி கல்லூரியில் வைக்கப்பட்டன. வாக்கு எண்ணும் மையத்துக்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தன. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
அனைத்து தபால் வாக்குகளும் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. மொத்தம் 16 தபால் வாக்குகள் இத்தொகுதியில் பதிவாகி இருந்தன. இந்த 16 வாக்குகளையும் பெற்று ஜெயலலிதா முன்னிலை வகித்தார்.
தொடக்க முதல்.. பின்னர் வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. முதல் சுற்று முதல் 17வது சுற்று வரை ஒவ்வொரு சுற்றிலும் சுமார் 9 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் ஜெயலலிதா தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார்.
1.50 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் 17வது சுற்றின் முடிவில் ஜெயலலிதா 1.50 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். வாக்குகள் விவரம்: ஜெயலலிதா ( அதிமுக) - 1,60,432 (88.44%) மகேந்திரன் (கம்யூனிஸ்ட்) - 9,710 (5.35%) டிராபிக் ராமசாமி (சுயேட்சை)- 4,590 யாருக்கும் வாக்கு இல்லை நோட்டா- 2,376 வித்தியாசம்: 1,50,722 வாக்குகள்
27 பேர் டெபாசிட்டும் காலி இத்தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டிய்ட்ட மகேந்திரன், டிராபிக் ராமசாமி உள்ளிட்ட 27 பேருமே டெபாசிட்டை பறிகொடுத்துள்ளனர். ஜெயலலிதாவின் வெற்றியை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். ஆர்கே நகர் தேர்தலில்- வேட்பாளர்கள் வாங்கிய ஓட்டுகள் முழு விவரம்
சான்றிதழ் பெற்ற வெற்றிவேல் ஜெயலலிதா வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. வெற்றிவேல், ஜெயலலிதாவுக்கான வெற்றி சான்றிதழை பெற்றுக் கொண்டார்.
No comments:
Post a Comment