ஜெயலலிதா முதல்வராக பதவியேற்பதில் தயக்கம் காட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குவிப்பு வழக்கில் விடுதலையான ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவியேற்க தடை நீங்கியுள்ள நிலையில், ஆனால் தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொள்வதற்கு ஜெயலலிதா அவசரம் காட்டவில்லை.
இன்று அமைச்சரவை ராஜினாமா செய்யக்கூடும், எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என எதிர்பார்த்த நிலையில் அதற்கான எந்த முயற்சிகளும் எடுக்கப்படவில்லை. ஜெயலலிதா எப்போது பதவியேற்பார் என்று தெரியாததால் ஆளுக்கொரு தேதியை பரப்பி வருகின்றனர். மேலும் அதிமுகவைச் சேர்ந்த 151 எம்எல்ஏக்களும் சென்னைக்கு கூட்டத்துக்கான அழைப்பு எப்போது வருமோ என்று அவர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
வரும் ஞாயிறன்று அவர் பதவியேற்பார் என்று செய்திகள் வெளியான நிலையில் அதிமுக தரப்பிலிருந்து இதுவரை சரியான தகவல்கள் வெளியாகவில்லை.
இதற்கிடையே தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment