பேச்சுவார்த்தையின்போது இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்த கோரிக்கைகளை தமிழக அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. அடுத்தக் கட்ட பேச்சு நாளை மறுநாள் நடக்க வுள்ளது.
இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக கிளை சார்பில் தமிழகம் முழுவதும் கடந்த 2-ம் தேதி காலை 6 மணி முதல் 3-ம் தேதி காலை 6 மணி வரை 24 மணிநேர வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டது. தனியார் மருத்துவ மனைகள், டாக்டர்கள் தாக்கப் படுவதை கண்டித்தும் மருத்துவ மனை பாதுகாப்பு சட்டத்தை உடன டியாக அமல்படுத்தக் கோரியும் இப்போராட்டம் நடந்தது.
இந்நிலையில், தமிழக அரசு இந்திய மருத்துவ சங்கம் இடையிலான பேச்சுவார்த்தை சென்னையில் நேற்று நடந்தது.
பேச்சுவார்த்தை குறித்து சங்கத்தின் செயலாளர் டாக்டர் சி.என்.ராஜா கூறியதாவது:
மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும். டாக்டர்கள் மீது ஒருவர் புகார் கொடுத்தால் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி மருத்துவ நிபுணர் குழு மூலம் விசாரணை நடத்த வேண்டும். மருத்துவமனையை பாதுகாக்கப் பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும். மருத்துவமனைகள், டாக்டர்களுக்கு என்று தனியாக ஹெல்ப் லைன் உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தோம். எங்கள் கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொண்டது. அடுத்தக்கட்ட பேச்சு வரும் 8-ம் தேதி நடக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment