Latest News

இதயத்தை உணவின் மூலம் பாதுகாக்கலாம்


ஹார்ட் அட்டாக் கேள்விப்படும்போது பயங்கரமா தான் இருக்கும். ஹார்ட் அட்டாக் வந்துட்டதால, அதோட எல்லாமே முடிஞ்சு போச்சுன்னு நினைச்சு, வாழ்க்கையை வெறுக்க வேண்டியதில்லை. ரெண்டு, மூணு முறை அட்டாக் வந்து பிழைச்சு, நிறைய காலம் ஆரோக்கியமா வாழறவங்களும் இருக்காங்க. வந்ததை நினைச்சு பயப்படாம, அடுத்து எப்படி இருக்கணும், அதுக்கு என்ன சாப்பிடணும், எப்படி சாப்பிடணும்னு தெரிஞ்சுக்க வேண்டியது அவசியம்.
இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் யாருக்கெல்லாம் வர வாய்ப்பு அதிகம்?
நீரிழிவு உள்ளவங்க, சிறுநீரகக் கோளாறு உள்ளவங்க, சிகரெட் பழக்கமுள்ளவங்க, உடல் பருமனானவங்க, மொனோபாஸ் கடந்தவங்க, எப்போதும் டென்ஷனா இருக்கிறவங்க, எந்த வேலையும் செய்யாம உடல் இயக்கமே இல்லாதவங்க, ஏற்கனவே குடும்பத்துல யாருக்காவது இதய நோய்கள் இருக்கிறவங்க, இவங்க எல்லாம் ஜாக்கிரதையா இருக்கிறது நல்லது.
இதய நோய்க்கான அறிகுறி நெஞ்சு வலியாதான் இருக்கணும்ணு அவசியமில்லை. அடிக்கடி தலைவலி, தலை சுற்றல், பார்வைத் தடுமாற்றம், ஞாபகமறதி, மூச்சு விடறதால சிரமம், தோள்பட்டை வலி. இதுல எது இருந்தாலும், அது இதய நோய்க்கான அறிகுறியாகவும் இருக்கலாம்னு உடனே டாக்டரை பார்க்கிறது அவசியம். சிகிச்சை, உடற்பயிற்சி, இது எல்லாத்தையும் விட முக்கியம் உணவு. அமெரிக்கால எல்லா உணவுகள்லயும் ‘டிரான்ஸ்ஃபேட்’னு சொல்லப்படற அடர்த்தி குறைவான மிதக்கும் கொழுப்பு இருக்காங்கிறதை பேக்கிங் லேபிள்ல போடணும்னு சட்டம் இருக்கு. நம்மூர்ல அப்படி எதுவும் இல்லாதது பெரிய குறை.
எதை சாப்பிடலாம், எது கூடாதுங்கிற விழிப்புணர்வு இல்லாம, கண்டதையும் சாப்பிட்டு நோய்களை விலை கொடுத்து வரவழைச்சுக்கறோம். சாப்பாட்டு விஷயத்துல ரொம்ப முக்கியமா கவனிக்க வேண்டியது ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ், சில வகை உணவுகளை சமைக்கிறபோதே, சத்துகள் ஆக்சிஜனோட சேர்ந்து ஆவியாகி வெளியேறிவிடும். அதைத் தடுக்க ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் அவசியம். கிரீன் டீ, பழங்கள், காய்கறிகள்ல இந்த ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகமா இருக்கு. உடம்புல கொழுப்பு அதிகமா இருக்கிறப்ப, ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் தங்காது. கூடவே நச்சுப் பொருளும் சேர்ந்து உண்டாக்கிற கோளாறுகள்ல இதய நோயும் ஒன்று. காய்கறிகளும் பழங்களும் எல்லாருக்கும் அவசியம்னு சொல்ல இது இன்னொரு காரணம்.
இதயம் பலவீனமானவங்க தவிர்க்க வேண்டிய உணவுகள்:
மீன் தவிர அத்தனை அசைவ உணவுகளையும்.
ஒரு முட்டைல 210 மி.கி. கொலஸ்ட்ரால் இருக்கிறதால, அது கூடவே கூடாது.
பேக்கிங் பவுடர் சேர்த்துச் செய்தவை, நெய், வெண்ணெய், சீஸ், தேங்காய், காபி, டீ, உருளைக்கிழங்கு சிப்ஸ், டின்ல அடைச்ச உணவுகள், தக்காளி சாஸ் கெட்ச்சப், ஃப்ரோஸன் உணவுகள் அதாவது உறைநிலை உணவுகள், அஜினோமோட்டோ இந்த எதுவும் வேண்டாம்.
‘ஊறுகாயும் அப்பளமும் இருந்தா போதும், வேற எதுவும் வேணாம்’னு சாப்பிறவங்க பலர். இந்த ரெண்டையும் போல ஆபத்தானது வேற இல்லை. காரணம், அதுல சேர்க்கப் படற உப்பு. அந்தக் காலத்துல அப்பளம் நல்லா விரிஞ்சு பொரியணும்னு பிரண்டை சாறு விடுவாங்க. இப்ப அதுக்குப் பதில் சோடியம். ஊறுகாயும் அதே மாதிரிதான். அதிக உப்பு ரத்தக்கொதிப்பை அதிகமாக்கி, இதய நலனைப் பாதிக்கும்.
சாப்பிடக்கூடிய உணவுகள்:
கீரை, முழு தானியங்கள், காய்கறிகள்,
அசைவத்துல மீன் மட்டும் (அதுல உள்ள ஒமோக 3 கொழுப்பு அமிலம் இதயத்துக்கு நல்லது)
ஓட்ஸ், பூண்டு, சின்ன வெங்காயம்.
தினசரி சமையல்ல சாதாரண புளிக்குப் பதிலா கொடம்புளி உபயோகிக்கலாம். கோக்கம்னு சொல்லப்படற கொடம்புளியை எந்தவித குழம்புலயும் சேர்க்கலாம். ரத்தத்துல கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி, இதயத்தைப் பாதுகாத்து, உடல் எடையையும் குறைக்கும் இது. கொழுப்பு குறைஞ்சாலே, இதயம் உள்ளிட்ட அத்தனை உறுப்புகளும் ஆரோக்கியமாக இருக்கும்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.