சென்னை விமான நிலையத்தை தனியார் மயமாக்குவது குறித்து இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் முடிவு செய்யப்படும் என்று விமான போக்குவரத்து மற்றும் சுற்றுலாத்துறை இணையமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை விமான நிலையத்தை தனியார் மயமாக்குவது குறித்த இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை. சென்னை விமான நிலையத்தை நவீனப்படுத்த பல கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும், அதை கருத்தில் கொண்டு இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் இறுதி முடிவு எடுக்கப்படும். சென்னை விமான நிலையத்தின் மேற்கூரைகள் விழாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு விமான மேற்கூரைகள், கண்ணாடிகள் விழுந்து விபத்துக்குள்ளாவது பற்றி விசாரணை நடைபெறும். இது பாதுகாப்பு தொடர்பானது. இந்த விவகாரத்தில் எக்காரணத்தைக் கொண்டும் சமாதானம் அடைய முடியாது என்றார்.
No comments:
Post a Comment