புதிய மோட்டார் வாகன சட்டத் துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் வருகின்ற 30ம்தேதி லாரி ஸ்டிரைக் நடைபெறும் என்று மாநில சம்மேளனம் அறிவித்துள்ளது. மத்திய அரசு தாக்கல் செய்துள்ள புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் வரும் 30ம் தேதி லாரிகள் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் நல்லதம்பி வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அரசு புதிய மோட்டார் வாகன சட்டத்தை, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இச்சட்டம் நடைமுறைக்கு வந்தால் லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.
லாரி தொழிலில் பின்னடைவு ஏற்படும். இந்த சட்டம் தனியாருக்கு சாதகமாகவும், மக்களின் உரிமையை பறிக்கும் வகையிலும் உள்ளது. எனவே, இந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி வரும் 30ம் தேதி அகில இந்திய அளவில் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் மேற்கொள்கின்றன. இதற்கு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆதரவு அளிக்கிறது. எனவே, தமிழகத்தை சேர்ந்த லாரி உரிமையாளர்கள் அன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை லாரிகளை இயக்க வேண்டாம். இவ்வாறு நல்லதம்பி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment