மத்திய மந்திரி கிரிராஜ் பேச்சு தொடர்பாக பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ‘குறுகிய மனப்பான்மை கொண்டவர்கள் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை’ என்று கூறி உள்ளார்.
மத்திய சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறை ராஜாங்க மந்திரி கிரிராஜ் சிங், ‘‘ராஜீவ் காந்தி ஒரு நைஜீரிய பெண்ணை (கருப்பின பெண்ணை) திருமணம் செய்து கொண்டிருந்தால், அவர் ஒரு வெள்ளை நிற பெண்மணியாக இல்லாது இருந்தால், காங்கிரஸ் கட்சி அவருக்கு தலைவர் பதவியை தந்திருக்குமா’’ என கேள்வி எழுப்பினார்.
இது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. இந்தியா முழுவதும் காங்கிரசார் இந்த கருத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள். காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி தரப்பிலும் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாயிகளை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சந்தித்தார். அப்போது கிரிராஜ் கருத்து குறித்து அவரிடம் கேட்டதற்கு ‘குறுகிய மனப்பான்மை கொண்டவர்கள் குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை’ என்றார்.
No comments:
Post a Comment