கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரணி அருகே உள்ள குமரப்பேட்டை பகுதியை சேர்ந்த சரவணன்(35), செல்வம்(36) ஆகிய இருவரும் திங்களன்று இரவு ஒன்றாக மது அருந்திக் கொண்டிருந்த போது மதுவை பிரிப்பதில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி செல்வம் சரவணனை கத்தியால் குத்தியதில் அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயரிழந்தார்.
கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரணி அடுத்த குமரப்பேட்டை அஞ்சாத்தம்மனை சேர்ந்தவர் சரவணன் (35), கட்டுமான பணியை செய்யும் கொத்தனார் வேலை செய்யும் இவருக்கு சுதா(30) என்ற மனைவியும், பிரியா (10) என்ற மகளும் சந்தோஷ் (9) என்ற மகனும் உள்ளனர்.
அதே போல குமரப்பேட்டை கே.ஆர்.கண்டிகையை சேர்ந்தவர் சிதம்பர ரெட்டியார் மகன் செல்வம் (36). கொத்தனாரான இவரும் சரவணனுமி நணபர்கள். நண்பர்கள் இருவரும் திங்களன்று வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தனர்.
தொடர்ந்து இவர்கள் குமரப்பேட்டையில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைக்கு சென்று 3 குவாட்டர் மது பாட்டில் வாங்கி கொண்டு அஞ்சாத்தம்மன் கிராமத்திற்கு வந்தனர். அங்கு உள்ள ஒரு கோவில் அருகே அமர்ந்து ஆளுக்கொரு குவாட்டர் மதுவை குடித்தனர். 3வது பாட்டிலை மதுவை பிரிப்பதில் அவர்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் மது போதை ஏறி ஆத்திரத்தில் செல்வம் வைத்திருந்த சிறு கத்தியால் சரவணனை கழுத்தில் குத்தினார். இதனால் சரவணன் அலறியபடி ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.அவரது அலரல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். செல்வம் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில் அக்கம் பக்கத்தினர் சரவணனை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வழியிலேயே சரவணன் உயிரிழந்தார்.
தகவல் அறிந்ததும் பெரியபாளையம் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் மற்றும் போலீசார் குமரப்பேட்டை கே.ஆர்.கண்டிகை சென்று அங்கு வீட்டில் பதுங்கி இருந்த செல்வத்தை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி அவரை கோர்ட்டில் ஒப்படைத்து புழல் சிறையில் அடைத்தனர்.
மது போதையில் நண்பன் சரவணனை செல்வம் கொலை செய்த இந்த சம்பவம் அப்பகுதி மட்டுமல்லாது சுற்று வட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment