உங்களுக்கு 10,000 ரூபாய் பரிசு உங்கள் பெயர் முகவரி தாங்கள் என்றும்…,உங்கள் கணவரின் குடிபிரச்சனைக்கு நாங்கள் இலவசமாக சிகிச்சை அளிக்கிறோம் என்றும்….உங்கள் பிள்ளைகளின் படிப்பு செலவுக்கு உதவித்தொகை தருகிறோம் என்றும்…..நீங்கள் வீட்டில் இருந்தப்படியே 10,000-20,000 சம்பாதிக்கலாம் படிப்பு முக்கியம் இல்லை நாங்கள் தேவையான பயிற்சி அளிப்போம் என்றும்…..
நீங்கள் உங்கள் கணவர் குடும்பத்தினரிடம் பெறும் கொடுமை அனுபவிக்கிறீர்கள் நாங்கள் சமூகப்பணி செய்கிறோம் உங்களுக்கு உதவுவோம் என்றும்….உங்கள் SIM card கேன்சல் ஆகபோகிறது காரணம் உங்கள் கணவர் பெயரில் கார்ட் இருக்கிறது உங்கள் ID நாங்கள் சொல்லும் முகவரிக்கு அனுப்புங்கள் என்றும்….,
இப்படி பலகோணங்களில் நம் அன்றாட தேவை மற்றும் பிரச்சனைகளை சொல்லி நமக்கு private number ல் இருந்து தொலைபேசி அழைப்பு வரும்….இன்னும் ஒருபடி மேலே போய் உங்கள் கணவருக்கும் அவருடன் வேலை செய்பவருக்கும் தப்பான உறவு,என்னிடம் அதற்கான ஆதாரம் இருக்கிறது என்றும்….அழைப்பு வருகிறது பெண்களுக்கு…#உண்மை எப்படி இந்த பெண்கள் பிரச்சனைகள் அவர்களுக்கு தெரிகிறது???
எப்படி இவர்கள் தொலைபேசி எண்கள் அவர்களுக்கு கிடைக்கிறது????
ஏன் பெண்களை மட்டும் மையப்படுத்தி இந்த நாசவலை பின்னப்படுகிறது????இதற்கு காரணங்களை விளக்கினால் யாராலும் நம்பமுடியாது .
1.பெரும்பாலும் ஆண்கள் அவர்கள் பற்றிய எல்லா விவரங்கள் மனைவியிடம் தெரிவிப்பது இல்லை அதனால் பெண்கள் ஒரு சந்தேகத்துடன் தான் வாழ்கிறார்கள்.
2.ஆண்கள் சம்பாதித்தாலும் பெண்கள் தான் மொத்த குடும்பப்பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள்.
3.குடிப்பழக்கம் இல்லாத ஆண்கள் தற்போது குறைவு தான் நம் சமூகத்தில்…இப்படியாக ஏதோ ஒரு பொது விஷயம் கூட தொலைபேசி அழைப்பை ஏற்கும் பெண்ணிற்கு சொந்த பிரச்சனையாகவே தெரியும்.உண்மை
அதுசரி எப்படி அந்த பெண்கள் தொலைபேசி எண்கள் இவர்களுக்கு கிடைக்கிறது???
நம்மை சுற்றி இருக்கும் நபர்களில் நல்லர் கெட்டவர் என்று கலந்தே இருக்கிறார்கள். தனியாக இருக்கும் பெண்கள்,கணவர் வெளிநாட்டில்
இருக்கும் பெண்கள்,குடும்பச்சுமையை சுமக்கும் பெண்கள் என்று நம்மை சுற்றி இருக்கும் பல ஆயிரம் கண்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறது இவர்கள் மூலம் பெண்கள் பற்றிய விவரம் அறிகிறார்கள்.
உண்மை கஸ்டர்கேர்களில் பணிபுரியும் நபர்கள் எந்த அளவுக்கு நப்பகமானவர்கள் என்று யாருக்கு தெரியும்?
பெண்கள் வெளிநாட்டில் இருக்கும் கணவருடன் பேசுவது,தோழிகளுடன் பேசுவது என்று அதை ஒட்டுக்கேட்டு அவர்கள் பிரச்சனைகளை அறிகிறார்கள்.
ஏன் குடும்பபெண்களை குறிவைக்கிறார்கள்????
1.பெரும்பாலும் குடும்பபெண்கள் ஒருவகையான மனஅழுத்தம் மற்றும் விரக்தியில் வாழ்கிறார்கள்.
2.ஆறுதலும் அரவணைப்பும் இல்லாமல் அதற்காக ஏங்கிகிறார்கள்.
3.அவர்கள் இந்த நாசக்கார கயவர்களிடம் சிக்கினால் பிரச்சனை வெளியே வராது.அந்த பெண்கள் இதை அவர்கள் எதிர்கால வாழ்க்கையை
மனதில்கொண்டு இரகசியமாகவே கையாள்கிறார்கள்.
4.குடும்பபெண்களிடம் இருந்த பணம் பறிப்பது எளிது.இப்படி பலகாரணங்கள் சொல்லலாம்.
இந்த நாசகார காமவெறியர்கள் பற்றிய சரியான விழிப்புணர்வு இல்லாத்து தான் அவர்கள் தங்கள் பொருள் மானம் மரியாதை இழக்க காரணங்களாக
இருக்கிறது.#உண்மை
தொலைபேசியும் தொலைத்தொடர்பு சாதனங்களும் நமக்கு பயணளிக்கவே கண்டுபிடிக்க பட்டாலும், இதிலேயும் சில ஏமாற்று யுக்திகளை கண்டறிந்து சில குடும்ப பெண்களை குறிவைத்து சீரழிவை ஏற்படுத்த முயல்கிறது,
சில கயவரகளின் கூட்டம்.. விழிப்புணர்வோடு இருப்போம் இடர்களை தவிர்ப்போம் ..
No comments:
Post a Comment