அல் பிஸ்மி நடத்திய 10 ஆம் ஆண்டு மாவட்ட அளவிலான தொடர் கைப்பந்து போட்டி கரியாப்பட்டினத்தில் இன்று (01-03-2015) சிறப்பான முறையில் நடைபெற்றது.இந்த போட்டியில் ஏராளமான அணிகள் கலந்து கொண்டனர்.மேலும் இந்த போட்டியில் அதிரையை சேர்ந்த அதிரை WSC மற்றும் அதிரை ப்ரண்ட்ஸ் (ESC) அணிகளும் கலந்து கொண்டது.
இதில் அரை இறுதி போட்டியில் அதிரை WSC அணி கட்டிமேடு அணியை எதிர்கொண்டு வெற்றி பெற்றும், அதிரை ப்ரண்ட்ஸ் (ESC) அணி பல்லாங்கோயில் அணியை எதிர்கொண்டு வெற்றி பெற்று அதிரை சேர்ந்த இரு அணிகளும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது . இதனை தொடர்ந்து இறுதி போட்டியில் LIGHT FAILURE காரணமாக ஆட்டம் சமநிலையில் நிறைவு பெற்றது .இதனையடுத்து இவ்விரு அணிகளும் முதல் இரண்டு பரிசுகளையும் சமநிலையில் பிரித்து கொண்டனர் .மேலும் இவ்விரு அணிகளும் தலா நான்கு அணியை எதிர்கொண்டு வெற்றி பெற்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
வெற்றி பெற்ற இவ்விரு அணிகளுக்கும் TIYAவின் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்றி : அதிரை பிறை
No comments:
Post a Comment