தொடங்கிவிட்டன. தி.மு.க. அணியில் இருந்து வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அண்ணா தி.மு.க. அணிக்கு தாவுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2006-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது அ.தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெற்றிருந்தது. அந்த தேர்தலில் தி.மு.க.வுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்காவிட்டாலும் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சி அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகி தி.மு.க.வுக்கு கூட்டணியில் இணைந்தது. அதன்பிறகு 2009-ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலை தி.மு.க. அணியுடன் சேர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சந்தித்தது. இதில் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி. ஆனார்.
லோக்சபா தேர்தலில் 2 தொகுதிகள்
2011-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போதும் தி.மு.க. கூட்டணியிலேயே விடுதலை சிறுத்தைகள் கட்சி இருந்தது. கடந்த லோக்ச்பா தேர்தலிலும் தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு திருவள்ளூர், சிதம்பரம் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
தோல்வி
சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் மீண்டும் போட்டியிட்டார். ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தி.மு.க. அணியும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
ஸ்ரீரங்கத்தால் விரக்தி
அதன் பிறகு தி.மு.க.- விடுதலை சிறுத்தைகள் இடையே கூட்டணியில் இணக்கமான சூழ்நிலை இல்லை. பொங்கல் பண்டிகையன்று தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு வாழ்த்து சொல்வதற்காக திருமாவளவன் நேரில் சென்றார். அப்போது ஸ்ரீரங்கம் தொகுதி தி.மு.க. வேட்பாளரும் இருந்தார். ஆனால் கூட்டணி கட்சி தலைவர் என்ற வகையில் திருமாவளவனுக்கு தி.மு.க. வேட்பாளரை கருணாநிதி அறிமுகம் செய்து வைக்கவில்லை. இது திருமாவளவனுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியது.
ஸ்ரீரங்கம் புறக்கணிப்பு
இந்த நிலையில் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. தேர்தலையும் புறக்கணித்தது.
நேரில் போகாத திருமா
கடந்த மார்ச் 1-ந்தேதி மு.க.ஸ்டாலின் தனது பிறந்த நாளை கொண்டாடினார். வழக்கமாக அவரது பிறந்தநாளுக்கு திருமாவளவன் நேரில் சென்று வாழ்த்து சொல்வது வழக்கம். ஆனால் இந்த முறை மு.க.ஸ்டாலின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல திருமாவளவன் நேரில் செல்லவில்லை. தனது கட்சி நிர்வாகியிடம் வாழ்த்து கடிதம் கொடுத்து அனுப்பினார். இதனால் தி.மு.க-விடுதலை சிறுத்தைகள் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்துள்ளது.
தி.மு.க. வேண்டாமே
அடுத்த ஆண்டு தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான கூட்டணியை அமைக்கும் முயற்சியில் ஒவ்வொரு கட்சியும் தங்களது தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் ஆலோசனையில் இறங்கியுள்ளன.
அண்ணா தி.மு.க. ஓகே
யாருடன் கூட்டணி அமைக்கலாம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆலோசித்து வருகிறது. தற்போது தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறலாம் என்பதே விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பெரும்பாலானோர் கருத்தாக இருக்கிறது. பெரும்பாலான தொண்டர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் அ.தி.மு.க. கூட்டணியில் சேரலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அண்ணா தி.மு.க. மூத்த அமைச்சர்களுடன் முதல் கட்ட பேச்சுவார்த்தையை திருமா தரப்பு தொடங்கியுள்ளது.
வெயிட் அண்ட் சீ
அண்ணா தி.மு.க. மேலிடமும் திருமாவின் விருப்பத்தை உடனே நிராகரிக்காமல் காத்திருக்க வைத்திருக்கிறது. அதே நேரத்தில் இரட்டை சிலை சின்னத்தில் போட்டியிடுவதாக இருந்தால் கூட்டணிக்குள் வரலாம் என்ற நிபந்தனையையும் அண்ணா தி.மு.க. விதித்துள்ளதாக கூறப்படுகிறது.
நம்பிக்கை தரும் தோழர்
அண்ணா தி.மு.க. அணியிடம் இடம்பெற்றுள்ள மற்றொரு கட்சித் தலைவர் இப்போது திருமாவுக்கு மிகவும் நம்பிக்கை கொடுத்து வருகிறாராம்.. திருமாவும் மிகுந்த நம்பிக்கையுடன் 'க்ரீன்' சிக்னலுக்காக காத்திருக்கிறாராம்..
No comments:
Post a Comment