செல்போன் கட்டணம் உயர்த்த தொலை தொடர்பு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2ஜி, 3ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் எடுத்த நிறுவனங்கள் 28 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசுக்கு உடனடியாக செலுத்த வேண்டியுள்ளது.
இந்த தொகையை வரும் 31–ந்தேதிக்குள் செலுத்தும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 10 ஆயிரம் கோடி ரூபாயை தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செலுத்த வேண்டும். எனவே கடன் சுமையை குறைக்க செல்போன் கட்டணத்தை உயர்த்த தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிமிடத்துக்கு 5 பைசா முதல் 10 பைசா வரை கட்டண உயர்வு இருக்கும் என்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கூறுகின்றன.
இதற்கிடையே செல்போன் கட்டணத்தை கடுமையாக உயர்த்தக்கூடாது என்று மத்திய தொலைத்தொடர்பு மந்திரி ரவிசங்கர் பிரசாத் எச்சரித்துள்ளார். செல்போன் கட்டணத்தை நிமிடத்துக்கு 1.3 பைசாவுக்கு அதிகமாக உயர்த்தக்கூடாது என்று அவர் அறிவுறுத்தி உள்ளார்.
No comments:
Post a Comment