காயிதே மில்லத் கல்லூரியின் 40வது ஆண்டு விழா சனிக்கிழமை 21.03.2015 சென்னை மேடவாக்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவையொட்டி, காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சார்பில், “அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் நேர்மைக்கான காயிதே மில்லத் விருது” இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, மனித உரிமை போராளி தீஸ்த்தா செட்டல்வாட் ஆகியோருக்கு மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ணகாந்தி வழங்கினார். அருகில் அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் எம்.ஜி.தாவூத் மியாகான், முனைவர் வே.வசந்திதேசி, எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ, பேரா. அ.மார்க்ஸ் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.
சென்னை மேடவாக்கம் காயிதே மில்லத் கல்லூரியை நடத்தி வரும், காயிதே மில்லத் கல்வி மற்றம் சமூக அறக்கட்டளை சார்பில், அரசியல் மற்றும் பொதுவாழ்வு நேர்மைக்கான காயிதே மில்லத் விருது சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த விருதுக்கு பல்வேறு அமைப்புகள் மற்றும் பிரமுகர்கள் மூலம் விருதுக்கான ஆளுமைகள் முன்மொழியப்பட்டனர்.
தேர்வுக் குழுவின் விரிவான பரிசீலனைக்குப் பிறகு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு அவர்களும், நாடறிந்த மனித உரிமை ஆர்வலரான தீஸ்த்தா செட்டல்வாட் அவர்களும் இவ்விருதுக்குரியவர்களாய்த் தேர்ந்தெடுக்கப்பட்டனர். விருது தொகையான ரூபாய் ஐந்து லட்சம் இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது.
21.03.2015 அன்று மேடவாக்கம் காயிதே மில்லத் கல்லூரியில், காயிதே மில்லத்தன் பேரனும், அறக்கட்டளையின் செயலாளருமான எம்.ஜி.தாவூத் தேசத் தந்தை காந்தியடிகளின் பேரனும், மேற்கு வங்கத்தின் முன்னாள் ஆளுநருமான கோபால கிருஷ்ண காந்தி விருதுகளை வழங்கிச் சிறப்புரை ஆற்றினார். விருது வழங்கும் விழா தொடர்பாக அந்த அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment