மசாஜ் கிளப்புகளில் விபச்சாரம் செய்வதை தடுக்க தமிழ்நாட்டில் அதிரடியான சட்டங்கள் வரவுள்ளன. சென்னை உட்பட தமிழகம் முழுவதும் மசாஜ் கிளப் என்ற பேரில் விபச்சாரம் நடப்பதாக தொடர் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
கடந்தாண்டு மட்டும் சென்னையில் 45 கிளப்புகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து விபச்சார தடுப்பு பொலிசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் மசாஜ் கிளப்புகளில் பொலிஸ் நடவடிக்கைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில், நேர்மையாக நடக்கும் கிளப்புகளில் சோதனை என்ற பெயரில் பொலிசார் தொல்லை கொடுக்கக்கூடாது என்றும், அதே நேரத்தில் தவறு நடக்கும் கிளப்புகள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் மசாஜ் கிளப்புகளை சட்டவளையத்துக்குள் கொண்டு வந்து, அவற்றை நியாயமான நெறிமுறைகளின்படி நடத்திடவும், அரசு அனுமதி பெறுவது தொடர்பாக உரிய வழிமுறைகளை வகுத்து உரிய சட்டம் கொண்டுவரவும் உயர்நீதிமன்றம் ஆலோசனை வழங்கி உள்ளது.
இதனையடுத்து மசாஜ் கிளப்புகளை ஒழுங்குபடுத்த அரசு அதிகாரிகள் மட்டத்தில் தீவிர ஆலோசனைகள் நடந்து வருவதாக தெரிகிறது.
இந்த சட்டங்கள் அமலாகும் பட்சத்தில் நேர்மையாக மசாஜ் கிளப் நடத்தி வரும் நபர்களுக்கு உரிய சட்ட பாதுகாப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment