சென்னையில் இளம்பெண்கள் சிலரை சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக ஆசைகாட்டி விபசாரத்தில் தள்ளிய நடிகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை ராமாபுரம் செல்லம்மாள் நகரில் உள்ள வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து வெளிமாநில இளம்பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து காவல்துறை ஆணையர் உத்தரவில் பொலிசார் அதிரடி நடத்திய சோதனையில், பெங்களூருவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் சிறை வைக்கப்பட்டிருந்தார்.
விசாரணையில், அவரை தரகர் ரமேஷ் என்ற ஆதித்யா (27) சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசைகாட்டி அழைத்து வந்து, விபசாரத்தில் தள்ளியது தெரிய வந்ததையடுத்து அந்த பெண் மீட்கப்பட்டதோடு, அந்த தரகரை கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் என்ற ஆதித்யா, சினிமாவில் கதாநாயகனாக நடிக்க ஆசைப்பட்டு சென்னை வந்து 4 படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார்.
மேலும், விசாரணையில், பணம் சம்பாதிப்பதற்காக விபசார தொழிலை தெரிவு செய்ததாக குறிப்பிட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment