பிரேசிலின் கிழக்கு பகுதியில் நேற்று வங்கி கொள்ளையர்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 11 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். அந்நாட்டின் ரியோ கிராண்ட் டோ நார்டே மாகாணத்தில் வங்கி கொள்ளையர்களுக்கும் போலீசாருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 7 பேர் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். கொள்ளையடிக்கும் நோக்கில் காரில் வந்து கொண்டிருந்த 7 பேரையும் போலீசார் சுற்றிவளைத்த போது, அவர்கள் மீது கொள்ளையர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். போலீசாரும் கொள்ளையருக்கு தக்க பதிலடி கொடுத்தனர். இதில் 7 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டதுடன், கடத்தப்பட்ட காரையும், அதன் டிரைவரையும் போலீசார் மீட்டனர்.
இதே போல் அந்நாட்டில் நடந்த மற்றொரு துப்பாக்கி சூடு சம்பவத்தில் 4 கடத்தல்காரர்கள் கொல்லப்பட்டனர். அங்குள்ள மங்கய்ராவின் ரியோ ஸ்லம்மில் போதைபொருள் கடத்தல் ஏஜென்டுகளுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பும் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டன. அப்போது விரைந்து வந்த போலீசார் தாக்குதல் நடத்தியவர்களை கட்டுப்படுத்த முயன்றனர். இதில் கடத்தல் பேர்வழிகளில் 4 பேர் பலியாக, இரு போலீசார் படுகாயமடைந்தனர். இத்தாக்குதலில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடமிருந்து ஏராளமான துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment