TIYA வின் வாழ்த்துக்கள்
சுழற்கோப்பையை கைப்பற்றி அதிரைக்கு பெருமை சேர்த்து தந்த அதிரை WSC அணி வீரர்களுக்கு TIYAவின் வாழத்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இது போன்ற விளையாட்டுகளில் தாங்கள் பல வெற்றி கோப்பைகளை பெற எங்களின் நல் வாழ்த்துக்கள்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் மாநில அளவிலான சுழற்கோப்பைக்கான கைப்பந்து தொடர் போட்டி நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்டு விளையாடிய நமதூர் வெஸ்டெர்ன் ஸ்போர்ட்ஸ் க்ளப் (WSC) அணி சிறப்பாக விளையாடி ராம்நாடு மற்றும் RS பட்டினம் ஆகிய அணிகளை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.
இறுதி போட்டியில் கீழக்கரை அணியை எதிர்த்து விளையாடிய அதிரை WSC அணியினர் தங்களின் மிகச் சிறப்பான நேர்த்தியான ஆட்டத்தால் கீழக்கரை அணியை வீழ்த்தி வெற்றிக் கோப்பையைக் கைப்பற்றி அதிரைக்கு பெருமை சேர்த்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பல திறமையான அணிகள் விளையாடிய இந்த போட்டியில் அதிரையில் இருந்து சென்று உள்ளூர் அணிகளை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றிய அதிரை WSC அணிக்கு TIYAவின் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்றி : அதிரைபிறை
No comments:
Post a Comment