ஹைதராபாத்: "நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்கும் திட்டம் அடுத்த மாதம் 1-ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும்" என தலைமை தேர்தல் ஆணையர் எச்.எஸ்.பிரம்மா தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஹைதராபாத்தில் தலைமை தேர்தல் ஆணையர் எச்.எஸ்.பிரம்மா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், "வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைப்பதற்காக மார்ச் 1-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி வரை நாடு முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட இருப்பதாக" கூறியுள்ளார். போலி வாக்காளர்களை கண்டறிந்து நீக்குவதற்காக மட்டுமே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும், வாக்களிக்கும் உரிமையில் இது எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது" என்று விளக்கமும் அளித்துள்ளார்.
"இத்திட்டத்தின் மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர் அடையாள அட்டை பெற்றவர்கள் மற்றும் போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்டு, வாக்காளர் பட்டியலில் இருந்து அவர்கள் நீக்கப்படுவதோடு தேர்தலின் போது கள்ள ஓட்டு போடுவதிலிருந்தும் தடுக்கலாம்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த பணி ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் 676 மாவட்டங்களில் முடிக்க திட்டமிடப்பட்டு இருப்பதாகவும், ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் மட்டும் கூடுதலாக 2 மாதங்கள் அவகாசம் அளிக்கப்பட இருப்பதாகவும்" அவர் கூறியுள்ளார்
நன்றி : இன்நேரம்
No comments:
Post a Comment