20 வருடத்திற்கு பிறகு ரிசர்வ் வங்கி, மீண்டும் ஒரு ரூபாய் தாள்களை புழக்கத்திற்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. 1.ரூ, 2.ரூ தாள்களை அச்சடிப்பது 1994, 1995 தத்தம் வருடத்திலேயே நிறுத்தப்பட்டாலும், நாணய சட்டம் 2011இன் படி இன்னமும் இந்த ரூபாய் நோட்டுகள் நாட்டில் செல்லதக்கதாக உள்ளது. புதிதாக அச்சிடப்படும் ஒரு ரூபாய் தாள்களை மத்திய அரசு அச்சிட உள்ளது, பொதுவாக அனைத்து ரூபாய் நோட்டுகளும் ரிசர்வ் வங்கியால் அச்சிடப்படும். ஆனால் ஒரு ரூபாய் தாள்கள் மட்டுமே மத்திய அரசால் அச்சிடப்பட்டு நிதியமைச்சக செயலாளர் கையெழுத்துடன் புழக்கத்திற்கு வருகிறது.
புதிய ஒரு ரூபாய் தாள்கள்
மேலும் புதிய ஒரு ரூபாய் தாள்கள் பச்சை நிறத்தில் அல்லாமல் பிங்க் கிரீன் நிறத்தில் இருக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதுமட்டும் அல்லாமல் புதிய டிசைன் வடிவமைப்புடன் வெளிவரும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. புதிதாக மத்திய அரசு வெளியிடும் ஒரு ரூபாய் நோட்டில் 9.7 செ.மீ, 6.3 செ.மீ நீள அகலம் கொண்டிருக்கும்.
சில்லறை தட்டுப்பாடு
நாட்டின் ஒரு ரூபாய் நாணயங்களுக்கு தட்டுப்பாடு உள்ளதால், சில்லறை தட்டுப்பாட்டை போக்க ஒரு ரூபாய் நோட்டுக்களை மீண்டும் அச்சிடுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கடந்த டிசம்பர் மாதம் தகவல் வெளியானது.
வாழ்நாள்
நாணயங்களோடு ஒப்பிடுகையில் ரூபாய் தாள்கள் குறிப்பாக 1.ரூ மற்றும் 2.ரூ தாள்களின் வாழ்நாள் மிகவும் குறைவு. அதாவது இவற்றின் சராசரி வாழ்நாள் ஓராண்டுக்கு மிகுவதில்லை. இதை கருத்தில் கொண்டே மத்திய அரசு ரூபாய் தாள்களை அச்சடிப்பதை நிறுத்தியது
பிற நோட்டுகள்
ஒரு ரூபாய் தாள்களின் வாழ்நாளையும், அச்சிடும் செலவையும் கருத்தில் கொண்டு மத்திய அரசு 1995ம் ஆண்டு ரூ.2 தாள்கள், 1995 ரூ.5 தாள்களை அச்சிடுவது நிறுத்தப்பட்டது. இருப்பினும் இவை இன்றும் புழக்கத்திலும் செல்லதக்கதாகவும் உள்ளது.
ஒரு ரூபாய் தாள்
தற்போது ரிசர்வ் வங்கியின் தகவல் படி இந்தியாவில் சுமார் 3,076 கோடி ரூபாய் அளவு ஒரு ரூபாய் தாள்கள் புழக்கத்தில் உள்ளது.
குட்ரிட்டன்ஸ்
இனி வணிகச் செய்திகளுக்காக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், டிவிட்டர் மற்றும் கூகிள்+ போன்ற சமுக வளைதளங்கள் மூலம் இணைந்திடலாம்.
thanks to all sir
ReplyDelete