கடந்த 6 மாத காலமாக விலை குறைவை சந்தித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் வேளையில், நாளையும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை குறையும் என் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விலை உயர்வை பெட்ரோலிய நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
அதன்படி, பெட்ரோல் மற்றும் டீசலின் தற்போதைய விலையில் இருந்து முறையே 82 மற்றும் 61 காசுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இவ்விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
No comments:
Post a Comment