ரங்கத்தில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் விரிவாக செய்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதைத் தொடர்ந்து தனது ஸ்ரீரங்கம் சட்டசபை உறுப்பினர் மற்றும் முதல்வர் பதவியை இழந்தார் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா. அதனைத் தொடர்ந்து காலியாக இருந்த ஸ்ரீரங்கம் சட்டசபைத் தொகுதிக்கு கடந்த 13ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
இதற்கென 322 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டது. இதில் 1,08,026 ஆண்கள், 1,13,138 பெண்கள் 8 இதரர் என மொத்தம் 2,21,172 வாக்காளர்கள் தங்களின் வாக்கினை பதிவு செய்தனர். 81.83 சதவீதம் வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன் வாக்குச்சாவடிகளில் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிமைலயில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டன. அனைத்து வாக்குச்சாவடிகளில் இருந்தும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வரப்பெற்றவுடன், வாக்கு எண்ணிக்கை மையத்தில் உள்ள பாதுகாப்பு அறை பூட்டி சீல் வைக்கப்பட்டது. தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்காக சென்னை - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சப்பூரில் உள்ள சாரநாதன் பொறியியல் கல்லூரி வளாகத்தில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ளது. வாக்குகள் எண்ணும் பணி நாளை காலை 8 மணிக்கு தொடங்கும். இதற்காக 14 மேஜைகள் போடப்பட்டுள்ளன. மொத்தம் 23 சுற்றுகளாக வாக்குகள் எண்ணிக்கை நடைபெற உள்ளது.
No comments:
Post a Comment