5 நாட்களாக நடைபெற்று வந்த எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சிலிண்டரில் கியாசை நிரப்பும் மையங்களுக்கு (பாட்லிங் பிளாண்டு களுக்கு) கியாசை எடுத்து செல்லும் பணியில், தென்மண்டல மொத்த சமையல் கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர் கள் சங்கத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.இவர்கள் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களிலும் சேவை செய்து வருகின்றனர்.
இவர்களுக்கான வாடகை நிர்ணய ஒப்பந்தம் கடந்த ஆண்டு அக்டோபர் 31-ந் தேதியுடன் முடிவடைந்ததால், புதிய வாடகையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று எண்ணெய் நிறுவனங்களிடம் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக நடந்த 3 கட்ட பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிவடைந்ததால் கடந்த 30-ந் தேதி நள்ளிரவு முதல் டேங்கர் லாரிகளை அதன் உரிமையாளர்கள் கியாஸ் நிரப்பும் நிலையங்கள் எதிரில் நிறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். இவர்களது வேலை நிறுத்தம் 5-வது நாளாக இன்றும் தொடர்ந்தது.
இந்த நிலையில், எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. 2-வது கட்டமாக நடைபெற்ற பேச்சு வார்த்தையில் சுமூக உறவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் சென்னையில் முத்தரப்பு வேலை பேச்சு வார்த்தை நாளையும் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதால், சமையல் கியாஸ் வினியோகத்திற்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நீங்கியுள்ளது.
No comments:
Post a Comment