உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பிசிசிஐ வீரர் முஹம்மது சமியின் அபார பந்து வீச்சால் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்தது.
உலக கோப்பை போட்டிகளில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பிசிசிஐ அணி 300 ரன்களை எடுத்தது. விராட் கோஹ்லி சதமடித்தார்.
வெற்றி பெற 301 ரன்கள் தேவை என்ற நிலையில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 47 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 224 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் பிசிசிஐ அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
பிசிசிஐ சார்பில் பந்து வீசிய முஹம்மது சமி சிறப்பாக பந்து வீசி 35 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஆட்ட நாயகனாக விராட் கோஹ்லி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நன்றி : இன்நேரம்.காம்
No comments:
Post a Comment