"மதக்கலவரங்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நடந்து முடிந்த டெல்லி மாநில சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 67 தொகுதிகளை ஆம் ஆத்மி கட்சி வென்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை கைப்பற்றியது. முதல்வராக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால் தேர்ந்தெடுக்கப்பட்டார். பதவியேற்பு விழா டெல்லியிலுள்ள ராம்லீலா மைதானத்தில் பொதுமக்கள் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.
முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டதும், கெஜ்ரிவால் பொதுமக்களுக்கு நன்றி கூறி சிறப்புரையாற்றினார். அப்போது, "தேர்தலின் போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து சிறப்பாக பணியாற்றுவேன்" என்று உறுதியளித்தார்.
மேலும், கடந்த சில மாதங்களாக டெல்லியில் உள்ள கிறிஸ்தவ மக்களின் தேவாலயங்கள் மீது மர்ம நபர்கள் சிலர் தாக்குதல் நடத்தி மதக்கலவரத்தை உருவாக்க முயன்று வருகின்றனர். இது ஏற்கத்தக்க செயல் அல்ல. எனவே, "மதக் கலவரங்களை தூண்டுபவர்கள் யாராக இருந்தாலும் இனி இதுபோன்ற செயல்களை செய்யாமல் உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாமல் தொடர்ந்து இதுபோன்ற செயலில் ஈடுபட்டால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரிக்கை விடுத்தார்.
நன்றி : இன்நேரம்.காம்
No comments:
Post a Comment