சென்னை பறக்கும் ரயில் தடம் புரண்டது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை வேளச்சேரியிலிருந்து கடற்கரை நிலையம் வரை செல்லும் பறக்கும் ரயில் நேற்று பூங்கா நகர் ரயில் நிலையத்திற்கு வந்தபோது திடீரென நான்கு பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கி நடைமேடையில் உரசியபடி நின்றன. இதனால் நடைமேடை சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாரும் காயமடையவில்லை.
இந்த விபத்து காரணமாக நேற்று காலை பூங்கா ரயில் நிலையத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ரயில்களும் ஆங்காங்கே நின்றன. 6 மணி நேரத்திற்குப் பிறகு அப்பாதையில் போக்குவரத்து சீரடைந்தது. இந்த விபத்து குறித்து தற்போது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வே மண்டல மேலாளர் மிஸ்ரா கூறுகையில், பூங்கா நகர் ரயில் நிலையத்தில் சம்பவம் நடைபெற்றது. பயணிகள் அதிகம் இருந்த காலை நேரத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. ஆனால் பயணிகள் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.
ரயிலின் முன்பகுதியில் 4 பெட்டிகள் தடம் புரண்டுள்ளன. விபத்துக்கான காரணம் குறித்து இப்போதைக்கு சொல்ல முடியாது. விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்றார் மிஸ்ரா.
No comments:
Post a Comment