இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட் டியை ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்த இன்ஜினியர் வீட்டில் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 15 சவரன் நகை களை கொள்ளை அடித்துச் சென்றனர்.
கே.கே. நகர் நடேசன் நகரில் வசித்து வருபவர் வத்சன் (33). சாப்ட்வேர் என்ஜினீயர். நேற்று முன்தினம் வீட்டின் கதவுகளை திறந்து வைத்துவிட்டு இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தார். போட்டி முடிந்த பிறகு, படுக்கை அறைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த பீரோ கதவு திறந்து இருந்தது. பீரோவில் இருந்த 15 சவரன் நகையை காணவில்லை. கே.கே.நகர் போலீஸார் விசாரிக்கின்றனர்.
No comments:
Post a Comment