தைவான் நாட்டைச் சேர்ந்த ட்ரான்ஸ் ஏசியா பயணிகள் விமானம் ஆற்றில் விழுந்து விபத்துக் குள்ளானதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 30 பேரைக் காணவில்லை என்பதால் இன்னும் கூடுதலாக உயிரிழப்புகள் ஏற்பட்டு இருக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.
விமான ஓடுபாதையிலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் தய்பேயில் உள்ள கீலங் ஆற்றில் அந்த விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. சங்ஷான் விமான நிலையத்திலிருந்து 53 பயணிகளுடன் தைபேயிலிருந்து கின்மென் தீவுகளுக்குச் சென்ற ஏ.டி.ஆர்-72 என்ற இந்த விமானம், அந்நாட்டு நேரப்படி இன்று காலை 10.55 மணியளவில் விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து, அங்குள்ள பாலத்தின் மீது மோதி கீலங் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.
கீலங் ஆற்றங்கரையில் இருந்து 100 மீட்டர் தொலைவில் விமானம் விழுந்ததால் பெருமளவிலான உயிர்ச்சேதம் ஏற்பட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இருந்தபோதும் 15 பயணிகள் உயிரிழந்துள்ளனர்.
இது வரை 10 க்கும் மேற்பட்ட பயணிகள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப் பட்டுள்ளனர். மேலும் 40 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிகிறது.
முன்னேறிச்செல்லக்கூடிய வேகத்தை விமானம் பெற முடியாததால் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என தெரியவந்துள்ளது.மேலும் இந்த விபத்தில் சாலையில் சென்ற கார் ஒன்றும் சேதமடைந்தது.இந்த விபத்தால் தைவானில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
No comments:
Post a Comment