பாலஸ்தீன்: இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையின் மீது கல் எறிந்ததாக குற்றம் சாட்டப்பட்டு ரமல்லாஹ் நகரில் கைது செய்யப்பட்ட பாலஸ்தீன் சிறுமி அல் கதீபிற்கு 1528 டாலர் அபராதமும் விதிக்கப்பட்டதோடு இரண்டாவது முறையாக காவல்நீட்டிப்பு செய்து இஸ்ரேலிய இராணுவ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இச்செய்தியினை அஹ்ரார் கைதிகள் கல்வி கற்கும் நிலையம் மற்றும் மனித உரிமை அமைப்பு வெளிப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக 14 வயதான சிறுமி அல் கதீபின் பெற்றோர் கூறும்போது,
"எட்டாம் வகுப்பு படிக்கும் என் மகள் டிசம்பர் 31 ஆம் தேதி இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகள் மீது கல் எறிந்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யபட்டாள். தற்போது இரண்டாம் முறையாக மீண்டும் சிறைவாசம் நீட்டிக்கப்பட்டு ஹஸ்ரோன் சிறைக்கு அனுப்பப் பட்டுள்ளார்" என்று கூறினர்.
இதை தொடர்ந்து அஹ்ரார் நிலைய இயக்குனர் புஆத் மலக், "சிறுமி இரண்டாம் முறையாக சிறையில் அடைக்கப்பட்டிருப்பது அவர் மனோ நிலையைப் பாதிப்பு அடையச்செய்யும். நாங்கள் இது தொடர்பாக மக்களிடையே சந்திப்புகள் நடத்தி சட்ட மற்றும் ஊடக ரீதியாக சிறுமி வெளிவர இஸ்ரேலிய அதிகாரிகளுக்கு அழுத்தம் தர முயற்சி எடுப்போம்" என கூறினார்.
கல் எறிதல், சாலை மறிப்பு, கத்தி வைத்து இருத்தல் முதலான குற்றச்சாட்டுகள் சிறுமி கதீப் மீது சுமத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment