உத்திரப்பிரதேசத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்து, கருக்கலைப்பு செய்ய வைத்த ஆசிரியரைப் போலீசார் கைது செய்துள்ளனர். உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள கோம்தி நகர் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு ஆசிரியராக பணி புரிந்து வருபவர் ஆர்.சி.திவாரி (47 ). இவர் கடந்தாண்டு டிசம்பர் மாதம் அப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்
.
நடந்ததை வெளியில் கூறக் கூடாது என மிரட்டியே அம்மாணவியே தொடர்ந்து அவர், இரண்டு மாதங்களாக பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதன் விளைவாக அம்மாணவி கருவுற்றுள்ளார். உடனடியாக திவாரி தனது மனைவி அனிதா மற்றும் இரண்டு பெண் மருத்துவர்கள் உதவியுடன், கடந்த 10ம் தேதியன்று அம்மாணவிக்கு தனியார் மருத்துவமனை ஒன்றில் கருக்கலைப்பு செய்துள்ளனர்.
மகளின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதைக் கவனித்த அம்மாணவியின் அம்மா, இது தொடர்பாக மகளிடம் விசாரித்துள்ளார். அப்போது நடந்த சம்பவம் அனைத்தையும் அம்மாணவி கண்ணீருடன் கூறியுள்ளார். உடனடியாக, இது தொடர்பாக அம்மாணவியின் தாயார் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் திவாரியைக் கைது செய்த போலீசார், அவரது மனைவி மற்றும் கருக்கலைப்பிற்கு உதவிய இரு பெண் மருத்துவர்கள் ஆகியோரை போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரித்து வருகின்றனர்
No comments:
Post a Comment