1078 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் தமிழக காவல்துறைக்கு நேரடியாக தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்காக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விசேஷ பயிற்சி அளிக்கப்படுகிறது.
நேரடி தேர்வு
தமிழக காவல்துறைக்கு 1078 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் நேரடியாக தேர்வு செய்யப்படுவார்கள் என்று அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்ப மனுக்கள் தற்போது ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வருகிறது. வருகிற மே மாதம் 23 மற்றும் 24-ந் தேதிகளில்
விண்ணப்பதாரர்களுக்கு எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. எழுத்து தேர்வில் வெற்றிபெற விண்ணப்பம் அனுப்பியவர்கள் பல்வேறு பயிற்சி மையங்களில் சேர்ந்து பயிற்சி பெற்று வருகிறார்கள்.
போலீஸ் துறைக்கான ஒதுக்கீட்டில் விண்ணப்பித்துள்ள போலீஸ்காரர்களும் தீவிர பயிற்சி பெற்று வருகிறார்கள்.
கமிஷனர் அலுவலகத்தில் பயிற்சி
போலீஸ்துறைக்கான ஒதுக்கீட்டில் விண்ணப்பித்துள்ள சென்னை போலீஸ்காரர்களுக்கு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சட்ட பாடம் தொடர்பாக தினமும் மாலை 2 மணி நேரம் விசேஷ பயிற்சி கொடுக்கப்படுகிறது. கமிஷனர் ஜார்ஜ் ஏற்பாட்டில், கூடுதல் துணை கமிஷனர் ஷியாமளாதேவி இது தொடர்பாக பாடம் நடத்தி வருகிறார்.
No comments:
Post a Comment