அகமதாபாத் கேந்திரிய வித்யாலய பள்ளியில் ஒரு கோடி பணம் மற்றும் 59 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகளும் உபயோகிக்கபடாமல் இருந்த ஆசிரியர்களின் பெட்டகத்தில் இருந்து எடுக்கப்பட்டது.
இன்று தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பெட்டங்களை சுத்தம் செய்யும் போது அதில் இரண்டு பெட்டகங்கள் மட்டும் திறக்க முடியாத நிலையில் இருந்தது. இதற்கான சாவியும் கிடைக்கவில்லை.அதனால் அதை உடைத்து பார்த்துள்ளனர்.
அதனுள் இருத்த ஒரு பையில் பணமும், மற்றொரு பையில் தங்ககட்டிகளையும் பார்த்த உடன் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் அவதேஷ் குமார் போலீசாரிடம் கூறியது :
நான் 2 ஆண்டுகளுக்கு முன்பு தான் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்று உள்ளேன். சுமார் 20 வருட கால பழமையான இந்த இரு பெட்டகங்களையும் யாரும் உபயோகிக்காக படாத நிலையில் உள்ளதாக தெரிகிறது. இந்த இரு பெட்டகங்களும் உபயோகிக்காக பட்டதற்கான ஆதாரங்கள் எங்களிடம் இல்லை என்று கூறினார்.
இதுகுறித்து போலீசார் கூறுயதாவது :
ஆசிரியர்களிடமும், மேலாண்மையிடமும் விசாரணை மேற்கொண்டதில் இந்த பணம் மற்றும் தங்க கட்டிகள் யார் வைத்தார்கள் என்று தெரியவில்லை என்றும் தொடர்ந்து விசாரணை நடைபெறும் என கூறினர்.
No comments:
Post a Comment