WhatsApp மற்றும் Snap chat போன்ற இன்டெர்நெட் சர்வீஸ்களுக்கு விரைவில் பிரிட்டனில் தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் பாரீஸில் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலால் பிரிட்டனை ஆட்டம் காட்டியது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, அந்நாட்டு பிரதமர் டேவிட் கேமரூன் தீவிரவாதத்தை ஒடுக்க கடுமையான சட்டங்களை கொண்டுவர முடிவு செய்துள்ளார்.
தீவிரவாதத்திற்கு எதிரான இந்த புதிய சட்டங்களின் அடிப்படையில் ஆன்லைன் கம்யூனிகேஷன் வசதிகளே தீவிரவாதிகள் எளிதாக தகவல் பறிமாறிக்கொள்ள ஏதுவாக இருப்பதாகவும், எனவே பிரிட்டன் புலனாய்வுத் துறை ஆன்லைன் கம்யூனிகேஷன் வசதிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆங்கில பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ள பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், ’எளிதாக தொடர்பு கொள்ளக்கூடிய எந்தவித தகவல் தொடர்பு வழிமுறைகளையும் இனி அனுமதிக்க போவதில்லை’ என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
ஒருவேளை இந்த சட்டங்கள் அமலுக்கு வந்தால், Snap Chat, ஆப்பிள் நிறுவனத்தின் i-Message, WhatsApp போன்றவைகளுக்கு நிரந்தரமாக தடை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment