மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது புதிய கண்டுபிடிப்பான ஹாலோ லென்ஸை Xbox ஒன் உடன் இணைக்கும் முயற்ச்சியில் இருக்கின்றது. அதென்ன? ஹாலோ லென்ஸ் என்கின்றீர்களா??
முற்றிலும் ஹாலோகிராம் தொழில் நுட்பத்தில் உருவாகும் இந்த ஹாலோ லென்ஸை தங்களின் விண்டோஸ் 10 இயங்குதளத்துடன் வெளியிடப் போவதாகக் கூறியுள்ளது மைக்ரோசாஃப்ட் நிறுவனம்.
ஹாலோகிராம் தொழில்நுட்பத்தில் உங்களுக்கு மானிட்டர், கீ போர்டு போன்று எதுவுமே இல்லாமல் உங்கள் கணினியை நீங்கள் இயக்க முடியும். உங்கள் வீட்டையே மானிட்டராகக் கொண்டு அழகாக வேலை செய்யமுடியும்.
தெளிவாக கூறவேண்டும் என்றால் நாம் பார்த்து வியந்த அவதார் மற்றும் அயன்மேன் போன்ற படங்களில் காட்டப்படும் தொழில்நுட்பம் போலதான் இது.
உங்களை பிரம்மிப்பில் ஆழ்த்தும் இந்த ஹாலோ லென்ஸ் விரைவில் அறிமுகமாக உள்ளது. எனினும் இதற்கான கால அளவினை குறிப்பிடவில்லை.
இந்நிறுவனம். இதன் மாதிரியை அறிமுகப்படுத்திவிட்டாலும் கூட இதில் இன்னும் சில திருத்தங்கள் இருக்கின்றதாம். அனைத்தும் சரிசெய்யப்பட்டு விரைவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.
No comments:
Post a Comment