கடந்த 15-01-2015 அன்று அதிரையிலிருந்து சென்னைக்கு தனியார் ஆம்னி பேருந்து புறப்பட்டது. 23 பயணிகள் இருந்தனர். பேருந்து அதிகாலை 4 மணி அளவில் பழைய மாமல்லபுரம் சாலை திருப்போரூரை அடுத்த தண்டலம் அருகே வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலை ஓர பள்ளத்தில் தலை குப்புற கவிழ்ந்தது. பேருந்தின் அடியில் சிக்கிய பயணிகள் பயத்தில் கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு தண்டலம் கிராம மக்களும், அவ்வழியே வாகனங்களில் சென்றவர்களும் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பஸ்சின் கண்ணாடிகளை உடைத்து இருக்கைக்கு அடியில் சிக்கியவர்களை வெளியே கொண்டு வந்தனர். இதில் பலத்த காயம் அடைந்த பயணி அதிரை காசியார் வீட்டை சேர்ந்த அப்துல் கறீம் (54) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
இந்நிலையில் விபத்தில் சிக்கிய மற்றொரு பயணி புதுத்தெருவை சேர்ந்த உமர் பாருக் ( வயது 66 ) பலத்த காயத்துடன் சென்னை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவருக்கு ஒரு புற கை அகற்றப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வநதனர். இந்நிலையில் இன்று அதிகாலை 2.15 மணியளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம். நன்றி.அதிரைநியூஸ்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம். நன்றி.அதிரைநியூஸ்
இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்
ReplyDeleteமர்ஹூமானவரின் பெயர் உமர் ஜாபர் திருத்திக்கொள்ளவும்
அப்துல் வாஹித் அண்ணாவியார்