இன்றைய மாறிவரும் காலகட்டத்தில் துணிகளை கைகளால் துவைக்கும் நிலை மாறி வாஷிங் மிஷின் கைகொடுக்கும் நிலை தற்போது உள்ளது. அதிலும் எளிதான வசதி மாறி இப்போது வரப்போகிறது. அதற்கான கையடக்க கருவியை சுவிட்சர்லாந்து ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.டால்பி எனப்படும் இந்த கருவி சோப் அளவில் தான் இருக்கிறது. அல்ட்ரா சோனிக் தொழில் நுட்பத்தில் செயல்படும் இந்த கருவியை பயன்படுத்தி, துணி துவைக்க சமையல் அறை சிங்க் போன்ற தொட்டி போதுமானது. அதில் நீரை நிரப்பி துணிகளை போட்டு சலவைத்தூளை போட வேண்டும்
.
பிறகு இந்த கருவியை உள்ளே போட்டுவிட்டால் இந்த கருவி, நீரில் அல்ட்ராசோனிக் தொழில் நுட்பத்தில் ஒலி அதிர்வுகளை ஏற்படுத்தும். நீரில் அது குமிழ்களை ஏற்படுத்தி துணிகளில் உள்ள கரைகளை வடிக்கச்செய்து வெளியே எடுத்துவிடும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
கைகளால் தேய்க்கவோ, நீரில் ஊரவைக்கவோ அவசியம் இல்லாமல், 30 நிமிடத்தில் டால்பி கருவி துணிகளை பளிச்சென்று மாற்றிவிடும் என்று கூறுகின்றனர். இதன் வணிக ரீதியான தயாரிப்பு வரும் 20ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அடிக்கடி பயணம் செய்வோருக்கு இது பயனுள்ளதாக இருக்கும். . இதன்விலை சுமார் ரூ.6 ஆயிரம் வரை இருக்ககூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment