Latest News

ஹஜ் பயணத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன: தமிழக அரசு அறிவிப்பு!


தமிழக அரசின் மூலமாக ஏற்பாடு செய்யப்படும் ஹஜ் பயணத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று தமிழக அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

''2015 இல் ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழ் நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் பெருமக்களிடமிருந்து சில விதி முறைகள் மற்றும் நிபந்தனைகளுக்குட்பட்டு மும்பை, இந்திய ஹஜ் குழு சார்பாக தமிழ் நாடு மாநில ஹஜ் குழு, ஹஜ் விண்ணப்பங்களை வரவேற்கிறது.

சென்னை, எண்.13, மகாத்மா காந்தி சாலை (நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை)யில், ரோஸிடவர், மூன்றாம் தளத்திலுள்ள தமிழ் நாடு மாநில ஹஜ் குழுவின் செயலாளர் மற்றும் செயல் அலுவலரிடமிருந்து ஹஜ் 2015 ற்கான விண்ணப்பப் படிவங்களை 19-01-2015 முதல் பெற்றுக் கொள்ளலாம் .

இவ்விண்ணப்பங்களை www.hajcommittee.com என்ற இணையதளம் மூலமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பப்படிவத்தை நகல்கள் எடுத்தும், உபயோகப்படுத்தலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை மனுதாரர்கள் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 20-02-2015.

மேலும், ஹஜ் 2015 பற்றிய விவரங்களுக்கு ஹஜ் 2015 ற்கான வழிமுறைகளைப் படிக்கவும் அல்லது இந்திய ஹஜ் குழுவின் இணையதளம்  www.hajcommittee.com ஐ அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, பயணி ஒருவருக்கு ரூபாய் 300ஐ திருப்பித் தரப்படாத பரிசீலனைக் கட்டணமாக பாரத ஸ்டேட் வங்கியின் இணைப்பு வங்கி திட்டத்தின் மூலம் இந்திய ஹஜ் குழுவின் கணக்கில் செலுத்தி அதற்கான வங்கி ரசீதின் நகலை இணைத்து தமிழ் நாடு மாநில ஹஜ் குழுவிற்கு 20-02-2015ற்குள் சமர்ப்பிக்க வேண்டும் ''

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.