அதிரை அருகே உள்ள புதுப்பட்டினத்தில் மாவட்ட அளவிலான கடற்கரை விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் பல்வேறு அணிகள் கலந்துகொண்டு விளையாடினர்.
இதில் வாலிபால் போட்டிகளும் நடைபெற்றது. வாலிபால் இறுதி போட்டியில் அதிரை WSC அணியினரும், தஞ்சை SDAT அணியும் மோதினர். ஆட்ட இறுதியில் 21-9 பாய்ண்ட் கணக்கில் WSC அணியினர் முதல் இடத்தை பெற்று சாம்பியன் பட்டத்தை பெற்றனர்.
அதே போல் கால்பந்தாட்ட போட்டியும் நடைபெற்றது. இதில் அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணியினரும், பட்டுக்கோட்டை அணியினரும் மோதினர். ஆட்ட இறுதியில் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணியினர் வெற்றி பெற்று தொடரில் மூன்றாம் இடத்தை பெற்றனர்.
இதையடுத்து பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக சேதுபாவாசத்திரம் காவல்துறை ஆய்வாளர் மாரிமுத்து, உதவி ஆய்வாளர் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். இதன் பிறகு சான்றிதல் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நடைபெற்ற இந்த போட்டிகளில் கலந்து கொண்டு முதலிடத்தைப் பெற்ற அணியினர் மாநில போட்டிகளில் பங்கு கொள்ள இருக்கின்றனர்.
செய்தி மற்றும் படங்கள்:
செய்யது இப்ராஹீம்
நன்றி :அதிரைநியூஸ்
No comments:
Post a Comment