வசதி படைத்தவர்களுக்கு வழங்கப்படும் காஸ் மானியம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, அதற்கான பணியில் மத்திய அரசு மும்மரமாகியுள்ளது.
வசதி படைத்தவர்கள், வருமான வரி செலுத்துபவர்களுக்கு சமையல் காஸ் சிலிண்டருக்கான மானியத்தை ரத்து செய்ய மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக குறிப்பிட்ட வருவாய் உள்ளவர்களின் பட்டியலையும் மத்திய நிதி அமைச்சக அதிகாரிகள் தயாரித்து வருகின்றனர்.
இதன் மூலம் சுமார் ஒரு கோடி பேருக்கு சமையல் காஸ் சிலிண்டருக்கு வழங்கப்படும் மானியம் ரத்தாகும் என்று மத்திய நிதி அமைச்சகம் மற்றும் பெட்ரோலியத்துறை அமைச்சக வட்டாரங்களும் சுட்டி காட்டியுள்ளன.
இதற்கான அறிவிப்பை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, பிப்ரவரி மாதம் 28ம் தேதி மக்களவையில் பட்ஜெட் தாக்கல் செய்யும் போது அறிவிப்பார் என்றும் நிதி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
காஸ் சிலிண்டருக்கு வழங்கப்படும் மானியத்தை பயனாளிகளுக்கு நேரடியாக வங்கிகள் மூலம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த தொடங்கியுள்ளமையும், இதற்கான கெடு வரும் மார்ச் மாதம் வரை நீடிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது..
நன்றி : இன்நேரம்
No comments:
Post a Comment